மீன் விற்பனை சரிவு!

கொழும்பு, செப். 17: சந்தைகளில் மீன் விலை குறைந்துள்ள போதிலும், நுகர்வோர் மீன்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டாத நிலை நீடிப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பேலியகொடை சந்தையில் பெரும்பாலான மீன்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மீன் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி குறிப்பிட்டார்.

குறிப்பாக 1,000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட மீன்கள் 500 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆனால், கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 1,600 ரூபாவாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *