கொவிட் தொற்றால் மேலும் 2 மரணங்கள்

கொழும்பு, செப் 17

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,744 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *