தேங்காய்களின் விலை 5.1 சதவீதமாக வீழ்ச்சி

கொழும்பு,செப் 17

இலங்கையின் தேங்காய்களின் விலை 5.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 1000 தேங்காய்கள் 58,155 ரூபாவுக்கு அண்மையில் இடம்பெற்ற ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகாரச் சபையினால், கடந்த வாரம் இடம்பெற்ற ஏலத்தில், 1000 தேங்காய்கள் 74,200 ரூபாயிலிருந்து, 65,800 காணப்பட்டது.

அத்துடன், ஏற்றுமதி நோக்கிலான தென்னை உற்பத்தி பொருட்கள், இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில், 8 சதவீதமாக அதிகரித்து, 501.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *