
யாழ்.மாவட்டத்தில் 3 வாரங்களில் மட்டும் சுமார் 21 பேர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட சுகாதார நிலமை தொடர்பாக நேற்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம், நல்லுார், கோப்பாய், சண்டிலிப்பாய், வேலணை, தெல்லிப்பழை, பளை போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்றுள்ளனர்.
எனவே தற்போதுள்ள மழையுடனான காலநிலையில் டெங்கு தொற்ற பரவாமல் இருப்பதற்கு சூழலை சுத்தமாக வைத்திருப்பது அவசியம், நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதாலும், வீதிகளில் கழிவுகளை பொறுப்பற்ற விதத்தில் வீசாதிருப்பதாலும் டெங்கு தொற்றிலிருந்து எம்மையும் சமூகத்தையும் பாதுகாக்கலாம் என மேலும் கூறியுள்ளார்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.