“100 நாள் செயல்முனைவு” எனும் திட்டத்தின்கீழ் வடக்கு கிழக்கு மக்களுக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு கிடைக்கப்பெற வேண்டுமென வடகிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரல்வழி போராட்டத்தின் 50 வது நாள் போராட்டம் இன்று திங்கட்கிழமை திருகோணமலை கடற்கரையில் முன்வைக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு இதனை ஏற்பாடு செய்ததோடுரௌ 50 வது நாள் குரல்வழிப் போராட்டம் வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள 08 மாவட்டங்களிலும் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்ற போராட்டத்தில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை பலூன்களில் பறக்கவிட்டதுடன், பட்டங்கள் விடப்பட்டு பதாதைகள் தொங்கவிடப்பட்டன.
அத்தோடு கடற்கரையில் வடகிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டுமென கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இவ் போராட்டத்தில் ஈடுபட்டோர் அரசியல் கைதிகளை விடுதலை செய், பேச்சு சுதந்திரம் எமது உரிமை, வடகிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும், பயங்கரவாத சட்டத்தை நீக்கு, நிலங்களை அபகரிக்காதே, ஜனநாகயத்தை பாதுகாரு உள்ளிட்ட வாசகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் சிவில் அமைப்பினர், இளைஞர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்நநு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்
- கொழும்பில் இரவோடு இரவாக மீண்டும் போராட்டம்
- பல்கலைக்கழக மாணவனைக் காணவில்லை – விசாரணைகள் தீவிரம்
- விகாரைகளுக்கு மின் கட்டணம் செலுத்த மறுக்கும் பிக்குகள்
- தாய்வானில் நிலநடுக்கம்: உயிரிழப்புக்கள் ஏதுமில்லை
- எல்லையில் மாட்டிக் கொண்ட பாக்கிஸ்தான் ட்ரோன்கள்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka

