யாழ்.கொடிகாமம் பகுதியில் புகைரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் கோமாநிலைக்கு சென்ற சிறுவனுக்கு விசேட மருத்துவ கட்டிலை யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பெற்றுக் கொடுத்துள்ளார்.
குறிப்பாக,கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தந்தையும் இரண்டு பிள்ளைகளும் கொடிகாமம் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி ஒரு பிள்ளை இறந்த நிலையில் மற்றும் ஒரு பிள்ளை இன்று வரை கோமா நிலையில் இருந்துவருகின்றது.
இந்நிலையில், அவருக்கு தேவையான விசேட மருத்துவ கட்டிலை வாங்கித்தருமாறு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பிரான்சில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஒருவரின் நிதி உதவியில் குறித்த கட்டில் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிற செய்திகள்