
கொழும்பு – மருதானை – டீன்ஸ் வீதிப்பகுதியில் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்த 84 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், 4 பெண்கள், 2 பௌத்த பிக்குகள் உட்பட 84 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சோசலிச இளைஞர் சங்கத்தினால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆர்பாட்ட பேரணியை கலைக்க கண்ணீர்புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
பிற செய்திகள்