நச்சுப் பொருள் அடங்கிய திரிபோஷா தாய்மார்களுக்கு வழங்கப்படவில்லை: திரிபோஷா நிறுவனம் விளக்கம்

கொழும்பு, செப். 24: கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் திரிபோஷாவில் aflatoxin என்ற நச்சுத்தன்மை குறிப்பிட்ட அளவிலும் பார்க்க அதிகளவில் அடங்கியிருப்பதாக நாகொட தேசிய சுகாதார ஆய்வு நிலையம் உறுதி செய்துள்ள நிலையில், aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரிபோஷாவில் aflatoxin என்ற நச்சுத்தன்மை குறிப்பிட்ட அளவிலும் பார்க்க அதிகளவில் அடங்கியிருப்பதாக நாகொட தேசிய சுகாதார ஆய்வு நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த திரிபோஷா மா தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த சூழலில், திரிபோஷாவில் aflatoxin நச்சுத்தன்மை அடங்கியிருப்பதாக முதல் முறையாக ஊடகங்களுக்கு தெரிவித்த , பொது சுகாதார பரிசோதகர் அமைப்பின் தலைவர் உபுல் ரோஹண சுகாதார அமைச்சின் விசாரணைக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்த்து குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *