
கடந்த 21 ஆம் திகதி இடம் பெற்ற சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு இன்று நீர்கொழும்பில் சர்வதேச சமாதான தினம் கொண்டாடப்பட்டது
நீர்கொழும்பு மணிகூட்டு கோபுரம் அருகில் இன்று மாலை 4 மணி அளவில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.
நீர்கொழும்பு சர்வ மத ஐக்கிய ஆலோசனை குழு இதனை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சர்வ மத தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
‘நமது குழந்தைகளுக்கு சமாதானம் நிறைந்த நாட்டை கட்டி எழுப்புவோம்’ என்பது இந்த நிகழ்வில் தொனிப் பொருளாக இருந்தது.
சமாதானத்தை வலியுறுத்தி சத்திய பிரமாணம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியில் இலங்கை வரைபடத்தில் சமாதானத்தை வலியுறுத்தி கையொப்பமிடும் நிகழ்வு இடம் பெற்றது.
பிற செய்திகள்