நவம்பர் முதல் 10 மணிநேர மின்வெட்டு?

கொழும்பு, செப். 24: நுரைச்சோலையில் உள்ள நிலக்கரி ஆலைக்குத் தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ள பணம் கிடைக்காததால் நவம்பர் முதல் வாரத்தில் தினமும் பத்து மணி நேரம் மின் வெட்டு துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை மின்சார சபை பொறியியல் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாட்டில் 40 வீதமான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. நுரைச்சோலையில் உள்ள நிலக்கரி ஆலைக்குத் தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ள அரசு பணம் செலுத்த தவறினால் மின்வெட்டு அதிகரிக்கும். மேலும், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நாட்டில் வரட்சியான காலநிலை நிலவுவதால் நாட்டில் நீர் மின்சாரம் பெருமளவில் பாதிக்கப்படும். இதனால், மின் வெட்டு அதிகரிக்கும் என்றார் அவர்.

இந்நிலையில், நுரைச்சோலையில் உள்ள நிலக்கரி ஆலைக்குத் தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ள பணம் மேலும் கூறுகையில் “நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மத்திய வங்கியுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரை வெற்றிகரமான பதில் கிடைக்கவில்லை. ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட 21 நிலக்கரிக் கப்பல்கள் உடனடியாக வரவில்லை என்றால் மின்வெட்டை தவிர்க்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *