சேதன பசளையை கொள்வனவு செய்ய விவசாயிகளுக்கு நிதியுதவி!

சேதன பசளையை கொள்வனவு செய்வதற்காக எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதாவது, கண்டி பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்

நாட்டில் போதுமான அளவு அரிசி உள்ளது.

ஆகையால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தான் அனைத்து தரப்பினருக்கும் தெரிவித்துள்ளளேன்.

மேலும், பெரும்போகத்தை சிறந்த சாத்தியமான போகமாக மாற்றி, மீண்டும் நாட்டுக்கு அரிசி இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்பது எமது பொறுப்பாகும்.

குறிப்பாக, 70 சதவீதமான இராசாயன உரங்களும், சேதன பசளை 30 சதவீதமும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

சேதன பசளையை கொள்வனவு செய்ய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளளோம்.

இராசாயன உரங்களையும் சலுகை அடிப்படையில் வழங்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *