இலங்கை இராணுவ வீரர்கள் தமக்கு வழங்கப்படும் உணவு தொடர்பான புகைப்படத்தை எடுத்து சமுக வலைத்தளங்களுக்கு அனுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அத்தகைய இராணுவத்தை தற்போதைய ஆட்சியாளர்களால் பராமரிக்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சேவைக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 49% பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இராணுவத்திடமிருந்து பாதுகாப்பு கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்