யாழ். மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 30 மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், சாவகச்சேரியில் இடம்பெறுகின்ற உளவள நிலையத்தில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்படுகின்றனர்.
இவர்களில் உயிர்கொல்லிப் போதைப்பொருளான ஹெரோய்னுக்கு அடிமையானவர்களும் உள்ளடங்குகின்றனர் என்று தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் அஜந்தன் சியா மினி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாடசாலை மட்டங்களிலிருந்தே போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் போதைக்கு எதிரான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
அந்தவகையில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவில் இருந்தும் இரண்டு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்து தற் பொழுது பயிற்சிகளை வழங்கி வருகின்றோம்.
கிராம மட்டங்கள் ரீதியாகவும் பாடசாலைகளை மையப்படுத்தியதாகவே இந்தச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில் தென்மராட்சி கல்வி வலயத்தில் 53 அதிபர்கள் மற்றும் 57 உளவளத் துணை ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயற்றிட்டத்தை அடுத்து, பல அதிபர்கள், ஆசிரியர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் மாணவர்களை சிகிச்சைக்காக ஒப்படைத்து வருகின்றார்கள். – என்றார்.
பிற செய்திகள்