போதைப்பொருளுக்கு எதிரான சிகிச்சை மையங்கள் வடக்கு – கிழக்கில் இல்லை. இந்தக் குறை உடனடியாக நிவர்த்திசெய்யப்படவேண்டும். – இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அண்மையில் இடம்பெற்ற போதைப்பொருளுக்கு எதிரான கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் அஜந்தன் சியாமினி இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
போதைப்பொருளுக்கு அடிமையாகிய 21 வயதுக்கு உட்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு கண்டியிலும், 21 தொடக் கம் 32 வயதுக்கு இடைப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு கம்பஹாவிலும், 32 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு காலியிலும் சிகிச்சை மறுவாழ்வு மையங்கள் உள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான சிகிச்சை மறுவாழ்வு மையங்கள் இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் போதைப் பொருளுக்கு எதிரான சிகிச்சை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படவேண்டும். – என்றார்.
பிற செய்திகள்