இன்று இலங்கை வரும் ஐ.நா பிரதிநிதி!

ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதியான சிண்டி மெக்கெய்ன் இன்று (25) நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், கொழும்பில் உள்ள அரச உயர் அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க நிதியத்தால் இயக்கப்படும் மனிதாபிமான உதவித் திட்டங்களின் பயனாளிகள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் தரப்பினருடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *