நாடுகள் தீவிர ஆபத்தில் உள்ளது: பொதுச் சபை கூட்டத்தில் அலி சபரி

நியூயோர்க்,செப் 25

இலங்கை உள்ளிட்ட வேறு எந்த நாடுகளினாலும் சவால்களை தனியாக சமாளிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வில் சனிக்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் ஏனைய விடயங்களினால் ஏற்பட்ட நெருக்கடிகளால் வளரும் நாடுகளும் அவற்றின் பொருளாதாரங்களும் கடுமையான ஆபத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.

போதுமான மூலதனத்திற்கான அணுகல் இல்லாததால் வறுமை, வேலையின்மை மற்றும் பட்டினி ஆகியவற்றை மக்கள் எதிர்கொள்வதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஐ.நா. பொதுச் சபைக்குப் பின்னர் இலங்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *