
நாட்டில் இளைஞர்களின் எழுச்சி ஒன்று உள்ளது என்பதில் மறைக்க ஒன்றும் இல்லை என்று விளையாட்டு துறை அமைச்சர் ரொசான் ரனசிங்க தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இனைத்தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இளைஞர்களின் எழுச்சியை அவதானிக்க முடிந்தது. இது ஏதோ ஒரு வகையில் இளைஞர்களது மன உழைச்சலை வெளிப்படுத்துகிறது.
எனவே நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்பட்டு மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதில் இரு கருத்துக்கள் இல்லை.
அதனடிப்படையில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு எமது அமைச்சு இயன்றளவு உயர் நிலையில் ஏதாவது செய்யலாம் என திட்டமிடப்படுகிறது.
எனது அமைச்சின் கீழ் மகாவலி காணிகளும் வருகின்றன. நாட்டிலுள்ள மொத்த காணிகளில் மூன்றில் ஒரு பங்கு மகாவலி திட்டத்தின் கீழ் உள்ளது.
மகாவலி குடியேற்றங்களில் 3,50,000 குடும்பங்கள் அவ்வப்போது குடியேற்றப்பட்டன. அவை கூட்டுக் குடும்பங்களாக அதிகரித்து இன்று அவர்களுக்கு மத்தியில் காணிப்பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேற்குறிப்பிட்டவர்களில் சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று 15,000 பேருக்கு காணி உறுதிகள் கையளிக்கப்பட உள்ளன.
மேலும் ஒரு இலட்சத்து முப்பத்தியையாயிரம் பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்காலத்தில் ஒவ்வொரு அங்குல காணியையும் உற்பத்தியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இஸ்ரேல் பாரல வனத்தில் கூட சக்தியை குவித்து நவீன தொழில் நுட்பம் மூலம் காய்கறி உற்பத்தி செய்கிறது. இன்று இஸ்ரவேல் காய்கறி ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது.
சூரிய மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு டொலர் பிரச்சினை உண்டு. நாட்டில் அத்தியாவசிய தேவைகளாக எரிபொருள், பசளை போன்றவை காணப்படுன்றது.
அதில் ஒன்றான மின்சார உற்பத்தியை சூரிய சக்தியில் இருந்து உற்பத்தியாக்குவது முக்கியமாகும், ஆனால் அதற்கு டொலர் பிரச்சினை தடையாக உள்ளது.
எனவே அதற்குறிய வெளிநாட்டு முதலீட்டாளர்களை தேடிப்பிடிக்க வேண்டி உள்ளது. எனவே காலப்போக்கில் படிப்படியாக நாடு முன்னேறும் என்ற நம்பிக்கை உண்டு என்றார்.
பிற செய்திகள்