
கொழும்பு, செப் 25
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு முதல் தடவை தோற்றிய நிலையில், உயர் தரத்திற்கு தெரிவாகும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமை பரிசில் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தும் வேலைத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்படி, ஒரு கல்வி வலயத்திலிருந்து 30 மாணவர்களை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 99 கல்வி வலயங்கள் காணப்படுகின்ற நிலையில், இந்த திட்டத்தின் ஊடாக ஆண்டுக்கு 2,970 மாணவ, மாணவிகள் நன்மை பெறவுள்ளனர்.