
பிரித்தானியா,செப் 25
மறைந்த இரண்டாவது எலிசபத் ராணியின் கல்லறை புகைப்படத்தை பகிங்ஹெம் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.
இந்த கல்லறையின் மேற்பரப்பானது, சிறப்பு மிக்க பாறையொன்றினால் வடிவமைக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது.
லண்டன் விண்ட்சர் கோட்டையிலுள்ள கிங் ஜார்ஜ் தேவாலயத்தில், இரண்டாவது எலிசபத் ராணியின் கணவரான எடின்பர்க் டியூக்கின் கல்லறைக்கு அடுத்ததாக மகாராணி அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராணியின் பெற்றோர் மற்றும் அவரது கணவர் ஆகியோரின் பெயர்கள் மற்றும் பிறப்பு, இறப்பு விபரங்களும், ராணி எலிசபத்தின் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளன.