
கொழும்பு,செப் 25
சோசலிச இளைஞர் சங்கத்தினால் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட தரப்பினர் தொடர்பில் கொழும்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்போது 84 பேர் கைது செய்யப்பட்டதோடு அவர்களில் இரண்டு தேரர்களும் நான்கு பெண்களும் அடங்குகின்றனர்.
அத்துடன் சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகரவும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.