மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ் பாட உதவி கல்வி பணிப்பாளர் பீ. ஹாஜா முகைதீன் (தோப்பூர்) எழுதிய “உள்ளூர் ஆளுமைகள்” எனும் நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தோப்பூர் கலை இலக்கிய பேரவையினால் இந்நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.இதன்போது நூலின் ஆசிரியர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த கல்விமான்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட 100 முக்கியஸ்தர்களின் தகவல்களை தாங்கியதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வரா நளீம் கலந்து கொண்டார்.
ஏனைய அதிதிகளாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், தோப்பூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.




பிற செய்திகள்