வாரியபொல – பண்டாரகொஸ்வத்தை பகுதியில் குளம் ஒன்றிற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதேசமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த சிசு உர பை ஒன்றில் இருந்த நிலையில், கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பின்னர் சுவசெரிய நோயாளர் காவு வண்டியின் மூலம் கொண்டு செல்லப்பட்டு நிகவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறித்த, சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, நேற்றும் தலவாக்கலை – வட்டகொட பகுதியிலுள்ள வடிகாண் ஒன்றிலிருந்து சிசுவொன்று மீட்கப்பட்டது.
அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், மீட்கப்பட்ட குறித்த சிசு நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வட்டகொட கீழ் பிரிவை சேர்ந்த 21 வயதான யுவதியொருவரே சிசுவை பிரசவித்துள்ளாரென அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், தாயும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிற செய்திகள்