
அடுத்த சிறுபோக பயிர்ச்செய்கையின்போது சோள உற்பத்தியை அதிகரித்து கோழித் தீவன விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கோழித் தீவனம் மற்றும் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பால் தற்போது கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் ஏறுமுகம் அடைந்துள்ளன.
அத்துடன் கோழித் தீவன விலை அதிகரிப்பால் கோழிப்பண்ணையாளர்களும் தமது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதற்கு மாற்றுவழியாக அடுத்த சிறுபோக பயிர்ச் செய்கையின் போது சோள உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிப்பட்டுள்ளது.
இதன் மூலம் விலங்குணவுக்கான செலவினத்தைக் கட்டுப்படுத்தி கோழி மற்றும் முட்டை விலையேற்றத்தை ஓரளவு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் –என்றார்.