கிண்ணியா ஜாவா வாசிகசாலை பெரியாற்றுமுனை பிரதேசத்தின் ஜாவா ஜூம்ஆ பள்ளிவாயலில் நேற்று மாலை சனிக்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது.
கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் நிசார்தீன் முஹம்மட் அவர்களின்
அனுசரணையோடு கிண்ணியா நகர சபையின் கீழ் இயங்கும் ஒரு கிளையாக இவ் வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டது.
இத் திறப்பு விழா நிகழ்வில் கிண்ணியா நகரசபை தவிசாளர் எம்.எம்.நிவாஸ் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில் இவ் வாசிக சாலை திறந்து வைக்கப்பட்டதுடன் இங்கு பத்திரிகைகள்,நூல்கள் என பலவற்றை படித்து பயன் பெறக்கூடியவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அதிதிகளாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.கனி,ஜோர்தான் நாட்டின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் சட்டத்தரணி அப்துல் லாபிர்,அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனின் தலைவர் கஸ்ஸாலி முகம்மட் பாத்திஹ்,நகரசபை உறுப்பினர்களான எம்.ஐ.எம். நிசார்தீன், எம்.எம்.மஹ்தி ஆகியோரோடு மேல்நீதிமன்ற பதிவாளர் எம்.எஸ்.எம்.நியாஸ், முன்னாள் பிரதம நூலகர் சபருள்ளாஹ் கான் என பல முக்கியஸ்த்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இவ் விழா ஜாவா ஜும்மா மஸ்ஜிதின் ஏற்பாட்டிளும் பெரியாற்றுமுனை சனசமூக நிலையத்தின் அணுசரணையோடும் இடம் பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



பிற செய்திகள்