
உயிர்கொல்லிப் போதைப் பொருளான ஹெரோய்னை எடுத்துக்கொண்ட மற்றொருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவுக்குட் பட்ட பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் ஹெரோய்ன் போதைப்பொருளை பயன்படுத்தியதனால் உயிரிழந்தார். மருத்துவப் பரிசோதனையிலும் அவரது உயிரிழப்புக்கு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்டமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.