யாழில் அதிர்ச்சி – உயிர்கொல்லி ஹெரோய்ன் விற்பனையில் சிறுவர்கள்

யாழ்.மாவட்டத்தில் உயிர்கொல்லியான ஹெரோய்ன் போதைப்பொருளை விற்பனை செய்ய சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என பொலிஸார் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்.மாவட்டத்தில் அதிகளவில் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் ஹெரோயின் உள்ளிட்ட அபாயகரமான ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பலர் அதற்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பெற்றோரை இழந்த பிள்ளைகள், பெற்றோரால் அதிகம் கவனிக்கப்படாத பிள்ளைகள், பெற்றோர் வெளிநாடுகளில் உள்ள சிறுவர்கள் இதற்கு அதிகம் இலக்குவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இவற்றைக் கட்டுப்படுத்த பொலிஸார் துரிதகதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் எனவும் அதற்கு அனைத்துத் தரப்பினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *