100 நாட்கள் செயல்முனைவின் 56 ஆவது நாள் மக்கள் குரல் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்திலுள்ள முன்னம்போடிவெட்டை கிராமத்தில் இன்று (25) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்;டது.
இந் 100 நாட்கள் செயல்முனைவின் 56ம் நாள் போராட்டத்தில் மூதூர், கிண்ணியா மற்றும் திருமலை பிரதேசத்தில் உள்ள பிரதேச பெண்கள், இளைஞர்கள்,விவசாயிகள்,பெண்கள் வலையமைப்பு உறுப்பினர்கள், சிறுகுழுக்களின் உங்கத்துவர்கள், ஆண்கள் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” “ நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் ” “ வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் ” “ 13 வது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.
குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம்” எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தினை கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு நீதியுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி முன்னெடுக்கப்படும்.
மேலும், ஜனநாயகப் போராட்டங்களுக்கு பெரும் சவாலாக இலங்கை அரச படைப்பிரிவினரும், இலங்கை படைப்பிரிவுகளின் புலனாய்வினர்களும் செயற்படுவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகவே நாம் கருதுவதுடன், பாதிக்கப்பட்ட மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் உரிமைக்கான குரல் வளையை நசிக்கும் செயலாகவே நாம் இதனை கருதுவதுடன், இவ்வாறான செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அத்துடன் எமது “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் ஜனநாயக ரீதியான மக்கள் குரலுக்கு மேன்மை தங்கிய இலங்கை சனாதிபதி அவர்கள் உதவ வேண்டும் எனவும் கோருகின்றோம்.






பிற செய்திகள்