
இரண்டு வருடங்களுக்கு முன்னர் பணத்தை இறைத்து செயற்கையாக கட்டமைக்கப்பட்ட பிரசாரப் பொறிமுறையின் ஊடாக மொட்டு முழு நாட்டையும் முட்டாளாக்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
குறிப்பாக, இந்த தந்திரத்தால் முழு நாடும் கண்மூடித்தனமாக ஏமாந்ததாகவும் அதன் கோர விளைவாக வங்குரோத்து நாடு உருவாகியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கொழும்பு மாவட்டம் கெஸ்பேவ தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இவ்வாறான போலி அரசியல் கட்டமைப்புடன் அதிகாரத்தை பெற்ற மாவீரன் இந்நாட்டை அதல பாதாளத்திற்கு தள்ளிவிட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்று அதன் இரண்டாம் கட்டமாக பொம்மை ஆட்சியொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நான் தான் சிறப்பாகச் செய்தேன் எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி நாட்டை அழிவுக்குத் தள்ளினார் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இன்று அதன் இரண்டாம் கட்டம் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்