வடக்குகிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வினை பெற்றுத்தருமாறு வழியுறுத்தி திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் – முன்னம்போடி வெட்டை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
“100 நாள் செயல்முனைவு ” எனும் திட்டத்தின்கீழ் ஆரம்பிக்கப்பட்ட இவ் போராட்டம் 56வது நாளாக இன்று இடம்பெற்றது.

வடக்குகிழக்கு ஒருங்கிணைப்புக்குழு இதனை ஏற்பாடு செய்திருந்தது.இதில் இளைஞர்கள் ,பெண்கள் அமைப்பினர் ,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பெண்கள் அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் வடகிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கப்பெற வேண்டுமென தீபமேற்றப்பட்டு பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் எங்கள் நிலம் எமக்கு வேண்டும், கருத்துச் சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்றுகூடுவது எங்கள் உரிமை, அரசியல் உரிமை எமக்கு வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்