
ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையேயான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை மேற்கொள்ள ஜப்பான் ஆவலுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இரு நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதுவராலயத்தின் பிரதித் தலைவர் கட்சுகி கொட்டாரோ தெரிவித்துள்ளார்.
வர்த்தகம் தொடர்பாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே ஜப்பானிய தூதுவராலயத்தின் பிரதித் தலைவர் தெரிவித்தார்
சர்வதேச ரீதியாக ஏற்றுமதி நடவடிக்கைகளில் பாரிய போட்டித்தன்மை இருப்பதானால் அதற்கு ஏற்ற வகையில் இலங்கை தமது ஏற்றுமதி நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்