மத ஸ்தலங்களில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுவது குறித்து கலந்துரையாடல்

மத ஸ்தலங்களில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுவது தொடர்பாக மின்சார சபைக்கும் புத்தசாசன அமைச்சுக்கும் இடையில் இன்று (26) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

புதிய மின் கட்டண திருத்தத்துடன் மத ஸ்தலங்களில் அதிகளவிலான மின்சார கட்டணம் அதிகரிப்பதாக புத்தசாசன அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சில சமய ஸ்தலங்கள் நிரம்பி வழியும் சந்தர்ப்பங்களிலும் அதிகளவான பிக்குகள் இருக்கும் சந்தர்ப்பங்களிலும் மின்சார பாவனை ஒப்பீட்டளவில் அதிகரிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆலயங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் நிலவும் மின் கட்டணப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை வழங்க எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹரகம ஸ்ரீ சந்திரஜோதி ஆலயத்தின் 50ஆவது ஆண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *