கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா ஜனாபதியால் தொடங்கி வைப்பு!

கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழாவை, ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்ற (திங்கட்கிழமை) காலை தொடங்கி வைத்தார்.

பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு தனி விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளியில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தார்.

கர்நாடகாவில் தசரா விழாவை ஜனாதிபதி தொடங்கி வைப்பது இதுவே முதல் முறை ஆகும். இதற்கு முன்பு எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோரே தொடங்கி வைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10 நாட்கள் நடக்கும் தசரா விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தசரா விளையாட்டு தீப்பந்த ஊர்வலம், தொழில் கண்காட்சி, மலர் கண்காட்சி, உணவு திருவிழா, தசரா விளையாட்டு போட்டிகள், குஸ்தி போட்டி, பொருட்காட்சி, யோகா பயிற்சி, அரண்மனை வளாகத்தில் 75ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி மலர் கண்காட்சி, சிற்பம் மற்றும் ஓவிய கண்காட்சி, சிறப்பு மின்னொளி காட்சி, மகளிர் தசரா, குழந்தைகள் தசரா, திரைப்பட விழா இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெறவுள்ளன.

கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில் தசரா விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

காவல் தெய்வமாக கருதப்படும் சாமுண்டீஸ்வரி அம்மன் விஜயதசமி அன்று மகிஷாசூரன் எனும் அரக்கனை வதம் செய்த வெற்றி கொண்டாட்டத்தையே தசரா விழாவாக கர்நாடக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த தசரா விழா ‘நாட ஹப்பா'(கர்நாடகத்தின் பண்டிகை) என்றும் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *