
கொழும்பு, செப்.26
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது வாக்குறுதியளித்தபடி 19வது திருத்தச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளை உள்ளீர்க்குமாறும் அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய கரு ஜயசூரிய, மக்களின் தலையீடு இன்றி மேற்கொள்ளப்பட்ட 20ஆவது திருத்ததினால் நாடு அழிவடைந்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அனைத்து சமூகங்களும் அச்சமின்றி வாழக்கூடிய வகையில் ஆட்சியமைக்க வேண்டும் என அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.