
பயாகல, கலமுல்ல பகுதியை நேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் தனது 17வது பிறந்தநாளில் நண்பர்கள் இருவருடன் நீராடச் சென்ற போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.
ரண்முத்து டெரன் சில்வா என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
பயாகலை கலமுல்ல புனித அந்தோனி வீதி முனையிலுள்ள கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த போது மூவரும் திடீரென அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது அருகில் இருந்த இளைஞர் ஒருவர் தண்ணீரில் குதித்து மாணவர் ஒருவரைக் காப்பாற்றியுள்ளார்.