வடமாகாணத்தில் திலீபனுக்கு உருக்கமாக நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வுகள், வடக்கு மாகாணத்திலுள்ள மாவட்டங்களில் பரவலாக உணர்வுபூர்வமாகப் பலராலும் கடைப்பிடிக்கப்பட்டது.

* வவுனியா

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தல், வவுனியா வீதி அபிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக அமைந்துள்ள கொட்டகையில் இறுதிநாளான  இன்று  திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி, ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

* முல்லைத்தீவு
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகள் புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு நகரப்பகுதி, உடையார்கட்டுப் பகுதிகளில் இன்று உருக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டன.


* யாழ்ப்பாணம்
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவாலயத்தில் இன்று உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.

* மன்னார்
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வு, மன்னாரில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று காலை கடைப்பிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *