
நாட்டில் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளார் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்.
ஊடக சந்திப்பொன்றில் நேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் அமைதியான போராட்டங்களை நடத்தலாம். எனினும் போராட்டம் நடத்தப்படுவதற்கு 6 மணித்தியாலங்களுக்கு முன்னதாக உள்ளூர் பொலிஸாரிடம் போராட்டத்துக்கான அனுமதியைப் பெற வேண்டும்.- என்றார்.