கெளரவமான அரசியல் தீர்வைக் கோரும் 100 நாள் கவனவீர்ப்பு போராட்ட செயற்றிட்டத்தின் 57 ஆவது நாள் கவனவீர்ப்பு மாந்தை சந்திப் பகுதியில் நேற்றுக் காலை முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், “கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்”எனும் தொனிப்பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாள்கள் போராட்டம் மேற்கொள்ளும் செயற்றிட்டத்தின் 57 வது நாள் கவனவீர்ப்புப் போராட்டம் நேற்று மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான இணையத்தின் ஒழுங்கமைப்பில் அதன் மாவட்ட இணைப்பாளர் சகாயம் திலீபன் தலைமையில் இடம்பெற்ற கவனவீர்ப்பில் இளைஞர்கள், பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.