
கொழும்பில் பல பகுதிகளை உயர்பாதுகாப்பு வலயங்களாக (HSZ) பிரகடனப்படுத்துவது நிச்சயமாக நல்லதொரு விடயம் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மக்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதால், அது அவர்களின் மற்றொரு எழுச்சிக்கு வழி வகுக்கும்.
இதுபோன்ற முடிவுகளை எடுப்பதும், மக்களுக்கு அழுத்தம் கொடுப்பதும் மக்களை அரசுக்கு எதிராகச் செல்லத் தூண்டும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் இந்த நாட்களில் மக்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பதை மக்கள் மற்றும் நான் உட்பட அனைவருக்கும் தெரியும்.
அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் போது, பொருளாதார நெருக்கடியைத் தணிக்க அவர்கள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் என்ன என்பதை அரசு மக்களுக்கு விளக்கியிருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் செய்ய வேண்டியதை முற்றிலும் எதிர்மாறாக அரசாங்கம் செய்கிறது என தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்