
கொழும்பு, செப். 26: ஹொரண பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ஆடைத்தொழிற்சாலைக்கு சொந்தமான வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி, வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை பேருந்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பொலிஸார் விசாரணைகளை முடுக்கியுள்ளனர். இந்நிலையில், காயமடைந்த மாணவர்கள் யாருமே கவலைக்கிடமான நிலையில் இல்லை என்றும் இது தொடர்பாக பெற்றோர் வீண் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.