
கொழும்பு, செப். 26: எதிர்வரும் செவ்வாய், புதன் கிழமைகளில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமலில் இருக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செவ்வாய், புதன் கிழமைகளில் பகலில் ஒரு மணித்தியால மின்வெட்டும், இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய வலயங்களில் குறித்த காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.