ஹொரண பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த, இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுடன் சென்றுக்கொண்டிருந்த பேருந்து வீதியை விட்டு விலகி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கான பேருந்துடன் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
காயமடைந்த மாணவர்களில் எவரும் கவலைக்கிடமான நிலையில் இல்லை எனவும் பெற்றோர் வீண் அச்சம்கொள்ள தேவையில்லை எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்