உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் மக்கள் செல்லலாம் – சுமந்திரன் எம்.பி

கொழும்பில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் மக்கள் நுழைய முடியும் என நாடளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழுப்பில் உள்ள பல்வேறு பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் தெற்கில் உள்ளவர்களுக்கு நான் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

பல தசாபத்தங்களாக வடக்கு கிழக்கு உயர் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டு,தற்போது வரை விடுவிக்கப்படாமல் உள்ளது.நாம் இப்போதும் உயர் பாதுகாப்பு வலையத்துக்குள்ளேயே இருக்கின்றோம்.அதுவும் சட்ட ரீதியாக அன்று அறிவிக்கப்படவில்லை.இந்த இடத்தை தாண்டினால் சுடுவோம் என்ற நிலையில் தான் நாம் அன்று வாழ்ந்தோம்.பழைய சட்டத்தை தூசு தட்டி 3 இடங்களை அவர் இப்போது உயர் பாதுகாப்பு வலையமாக அறிவித்துள்ளார்.

நாம் போராட்டம் நடாத்திய காலி முகத்திடல்,நீதி மன்ற வளாகம்,பாரளுமன்ற வளாகம் ஆகியவற்றை உயர் பாதுகாப்பு வலயமாக அவர் அறிவித்துள்ளார்.ரகசிய சட்டம் மூலம் அவர் இதை அறிவித்துள்ளார்.இது சட்ட ரீதியாக செல்லுபடி அற்றது.ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் மக்கள் செல்லலாம் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *