
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக, கொழும்பு மாநகர சபை வளாகத்தில் தோட்டப் பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதாவது, கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், குறித்த பயிர்கள் செழிப்பாக வளர்ந்து காண்போரின் கண்ணை கவர்வதாக அமைந்துள்ளது.
மேலும், கொழும்பு மாநகர சபை காணியானது பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்லும் இடமாக இருப்பதால், மக்களை விவசாயத்தில் கவனம் செலுத்தி மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் நோக்கில் கார்கில்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் மாநகர சபை பிரதேசத்தின் ஒரு பகுதியானது சிறந்த பயிர்ச்செய்கை நிலமாக மாறியுள்ளது.
இந்த நிலத்தில் கத்தரிக்காய், பீன்ஸ், மிளகு, மிளகாய், தக்காளி, வெள்ளரி, முட்டைக்கோஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன.
பிற செய்திகள்