ஆர்ப்பாட்ட இடம்’ தவறான பகுதியில் அமைந்துள்ளது – பாதுகாப்பு செயலாளர் ஒப்புதல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆர்ப்பாட்ட இடம்’ தவறான இடத்தில் அமைந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் (ஓய்வுநிலை) கமல் குணரத்ன ஒப்புக்கொண்டார்.

கொழும்பில் அதி உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்தல் மற்றும் சட்டவிரோத போராட்டங்களுக்கு எதிராக பலத்தை பிரயோகிப்பது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘ஆர்ப்பாட்ட இடம்’ தவறான பிரதேசத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை நாங்கள் புரிந்து கொண்டோம். வெளிநாட்டுத் தூதுவர்கள் பயன்படுத்தும் பல தங்குமிடங்களும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ளன.

எவரும் காலி முகத்திடலில் பொழுதுபோக்கிற்குள் நுழைவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆர்பாட்டம் செய்வதற்கு காலி முகத்திடலை அண்டிய பகுதியில், பிரத்தியேகமான இடமொன்றை ஒதுக்கியிருந்தார்.

அண்மையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில், காலி முகத்திடல் சுற்றுவட்டம் மற்றும் அதற்குரிய கடற்கரை என்பனவும் உள்ளடங்குகின்றன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *