பூநகரி – பரந்தன் பாதையில் செல்பவர்கள் அவதானம்!

பூநகரி – பரந்தன் பாதையில் செல்வோர் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாரூ ஆட்கள் நடமாற்றம் குறைந்த இந்த பாதையில் வழிப்பறிகள் இடம்பெறுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குடமுருட்டி பாலத்திற்கு அருகில், பைக்கொன்றில் நின்றிருந்த இரண்டு பேரில் ஒருவர் வீதியின் குறுக்கே வந்து, மறிக்க முற்பட்டார்.

இவர்களின் செயல்கள் பற்றி முன்னமே அறிந்திருந்தபடியால், மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகரித்துக் கொண்டு அவர்களைக் கடக்க முற்படுகையில், அவர்கள் குறுக்கே வரவே கைகளில் அடிபட்டு, ஒருவாறு தப்பிக்க முடிந்ததாக பாதிக்கப்பட்ட ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

எனவே அவ்வழியால் தனியாக செல்கையில் மறித்தால் நிற்காதீர்கள் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பரந்தன் செல்லாமல், குறுக்காக கரடிப்போக் சந்தியை அடையும் வீதியில், இதற்கு முன்னரும் பெண்ணொருவரை மறித்து, இரண்டு பேர் தாக்கி உடமைகளை பறிக்க முற்படுகையில், தூரத்தே பிறிதொரு வாகனம் வரவே, வயல் வழியே ஓடிமறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த வீதியில் வாழ்வாதாரத்துக்காக பாலைப்பழம், ஈச்சம்பழம், கயூ பழம், நாவல் பழம் என விற்பனை செய்பவர்கள், அதிகளவானவர் வீதியில் நின்று மறித்து விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் வழிப்பறிகறிகளால் அவர்களின் வியாபாரமும் பாதிக்கப்படவுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *