ராஜபக்சவினர் குறித்து மக்கள் இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளனர் என புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ராஜபக்ச ஆட்சிக்கு தேவையான ஆதரவு 69 இலட்சம் அல்ல 09 இலட்சம் கூட இருக்காது என்றும் அவர் கூறினார்.
நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், பிரிந்து செயற்படுவதில் அர்த்தமில்லை. எதிர்காலத்தில் இடதுசாரி சக்தியின் தலைமை ஒன்று உருவாகும், அதன் தலைவராக தமக்கு விருப்பமில்லை குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராஜபக்ச ஆட்சி குறித்து தாம் எதுவும் கூறமுடியாது எனவும், மக்கள் இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிற செய்திகள்