
பிரபல போராட்டக்காரரான தானிஸ் அலியின் கையடக்கத் தொலைபேசி, டெப் கணினியை சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் போராட்டக்காரர்கள் பலர் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரபல போராட்டக்காரரான தானிஸ் அலியின் கையடக்கத் தொலைபேசி, டெப் கணினியை சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
கருவாத்தோட்டம் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்றே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதனை அடுத்து குறித்த விவகார வழக்கை எதிர்வரும் 2023 ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
பிற செய்திகள்