தொல்லியல் திணைக்களத்துக்கு 3,000 பணியாளர்கள் முறையற்ற விதத்தில் ஆட்சேர்ப்பு!?

2018 – 2019 ஆம் ஆண்டுகளில் மத்திய கலாசார நிதியம் சட்டத்தை மீறி 3,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை தொல்லியல் திணைக்களத்துக்கு பணியமர்த்தியுள்ளது என தேசிய கணக்காய்வு அலுவலகம் கூறியுள்ளது.

இவர்களின் சம்பளத்துக்காக 106 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனமொன்றின் சார்பில் ஊழியர்களை பணியமர்த்துவதற்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படாததன் அடிப்படையில், இந்த நிறுவனம் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *