திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் உள்ள ஏத்தாலை வயல் வெளியில் சுமார் 300 ஏக்கர் சிறுபோகத்திற்கான வேளாண்மை அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்றது.
எனினும் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கப்பெறவில்லையென விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் உரிய நேரத்திற்கு உரம் கிடைக்காமையால் சுமார் 45000 ரூபாய் கொடுத்து யூரியா பசளையை பெற்றதாகவும், அத்தோடு வயல் வேலைக்கான இயந்திரக் கூலியும் என்றுமில்லாதவாறு இம்முறை அதிகரித்தமையால் இவைகளுக்கான செலவுகளை பார்க்கும்போது இம்முறை அறுவடையில் நஷ்டத்தையே எதிர் நோக்கியுள்ளதாக தோப்பூர் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பசளைத்தட்டுப்பாடு, இயந்திரக்கூலி அதிகரிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு அதிகரிப்பு என்பன தொடர்ந்தும் நிலவுமாக இருந்தால் விவசாயத்தை கைவிட வேண்டிவருமெனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே இதுவிடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அடுத்த முறையேனும் பசளையை உரிய நேரத்திற்கு குறைந்த விலையிலோ அல்லது மானிய அடிப்டையிலோ வழங்க வேண்டுமென தோப்பூர் பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிற செய்திகள்