
கொழும்பு, செப்.28
முகத்துவாரம், கஜீமா தோட்டத்தில் பரவிய தீ விபத்தினால் இடம்பெயர்ந்துள்ள 300 பேருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு 8 மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர தீயணைப்பு திணைக்களம் மற்றும் கடற்படையின் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தினால், உயிர்ச்சேதமோ எவருக்கும் காயமோ ஏற்படவில்லை என்பதுடன் சுமார் 300 பேர் அளவில் இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்கள் களனி நதீ விகாரை மற்றும் முவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு சனசமூக மண்டபத்தில் தற்காலிக தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.